குழந்தை பாக்கியம்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது நடக்கும். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களின் நம்பிக்கைக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். பொருளாதார நிலைகள் ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனாலும், இந்த வாரம் நிறைய செலவு செய்வீர்கள். பேச்சின் மூலமாக சம்பாதிப்பவர்களுக்கு வருமானங்கள் உண்டு. எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத செய்திகள் வரும். விற்பனையாகாத சொத்துக்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட், கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். எதிர்பாராத டூர், டிராவல், என்டெர்டெயின்மென்ட் போன்றவை நிகழ வாய்ப்புள்ளது. இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் இருவருமே லாபம் அடைவீர்கள். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். எது எப்படியிருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. அந்நிய பாஷை, அந்நிய மொழி பேசும் நண்பர்கள் எதிர்பாராத விதமாக அமைவார்கள். இந்த வாரம் முழுவதும் பகவான் கிருஷ்ணர் மற்றும் சிவனை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்