எதிர்பாராத தனவரவு

Update:2024-09-03 00:00 IST

2024 செப்டம்பர் 03-ஆம் தேதி முதல் செப்டம்பர் 09-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட், டூர் ஆகியவை இருக்கின்றன. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு சுமார். நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் சுமாராகத்தான் இருக்கும். நீங்கள் பெரிதாக முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் உங்களுக்கு சாதகமாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு. பெரிய அளவில் உங்களுக்கு கடன் இருந்தது என்றால் குறைவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. அதேபோன்று தீர்க்க முடியாத நோய் இருந்தால் அதன் தன்மை குறையும். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் நீங்களும், பார்ட்னரும் லாபம் அடைவீர்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத தனவரவு, பொருள் வரவு ஆகியவை இருக்கின்றன. முன்னோர்களின் சொத்துக்கள் இந்த வாரத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். பார்க்கும் வேலையில் கவனம். இல்லையென்றால் அந்த வேலையில் இருந்து வெளியேற வேண்டிய, வெளியேற்றப்பட வேண்டிய சூழ்நிலை என்பது இருந்து கொண்டே இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி, வருமானங்கள், சம்பாத்தியங்கள் நன்றாக இருக்கிறது. வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்