போட்டித்தேர்வுகளில் வெற்றி

Update:2024-06-18 00:00 IST

2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடியவை கையில் பணமாகவோ, தனமாகவோ, பொருளாகவோ இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பீர்கள். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் வீடு, இடம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் சுமார். கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட், ரேஸ், லாட்டரி ஆகிய யூக வணிகங்கள் அனைத்தும் பரவாயில்லாமல் இருப்பதால் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். எதிர்பாராத சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலைகள் மற்றும் வேலை வாய்ப்பு நன்றாக உள்ளது. அதிலும் வேலையை பொறுத்தவரை, நல்லதொரு முன்னேற்றம், அங்கீகாரம், பணி உயர்வு, சம்பள உயர்வு, பணப்பயன் ஆகியவை கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டுத்தொழில் இரண்டுமே நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்