வருமானங்கள் கூடும்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வருமானங்கள், சம்பாத்தியங்கள் கூடும். நினைத்த காரியங்கள் ஓரளவுக்கு நடக்கும். இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் இருக்கிறது. சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ் ஆகியவை பரவாயில்லாமல் இருக்கும். திருமணம் தள்ளி போனவர்களுக்கு திருமணம் நடைபெறுவதற்கான வாய்ப்பு; அது சம்மந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. வேலை என்பது இருக்கும். எந்த துறையில் பணியாற்றினாலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. அவசரம், அவசியம் இருந்தால் தவிர லோன், கடன் வாங்குவதை நிறுத்துங்கள். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது, டிரேடிங் செய்வது போன்றவற்றில் கொஞ்சம் பொறுமை தேவை. விட்டதை பிடிக்க ஆசைப்படாதீர்கள். லாபம் வருவது மாதிரியான தோற்றம்; ஆனால், லாபம் இல்லை. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்; அந்நிய மொழி பேசும் நண்பர்களால் சகாயம் உண்டாகும். மூத்த சகோதரிகளால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் துர்க்கையையும், அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்