குழந்தை பாக்கியம் உண்டு

Update:2024-10-15 00:00 IST

2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தொழில் பரவாயில்லாமல் இருக்கிறது. உங்களின் மணவாழ்க்கை மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. குழந்தைகளால் நற்பலன்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருப்பவர்களுக்கு; சிகிச்சை எடுத்தும் பலனளிக்காமல் இருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. எதிர்பாராத ஆலய தரிசனம் ஏற்படும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் ஃபண்ட், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் பரவாயில்லை. எதில் முதலீடு செய்தாலும் ஓரளவுக்கு லாபம், வருமானம், சம்பாத்தியம் இருக்கிறது. லாபம் இருக்கிறது என்பதற்காக பிட்காயின், கிரிப்டோ கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டாம். வேலை வாய்ப்புகளை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. வேலையில் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள்; நல்லது நடக்கும். எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். நட்பு வட்டாரம் நன்கு டெவலப் ஆகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்