எதிர்பாராத பணவரவு

Update:2024-10-08 00:00 IST

2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மெனக்கெடல்கள் இல்லாமல் சாதாரணமாகவே முயற்சி செய்யுங்கள்; ஓரளவுக்கு வெற்றி பெறுவீர்கள். நெருங்கிய உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இளைய சகோதர - சகோதரிகளால் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். இந்த வாரம் முழுவதுமே ஏதோவொரு விதத்தில் உங்களுடைய கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். உங்கள் நெருங்கிய நட்பு வட்டாரத்தை மெயின்டைன் செய்யவில்லை என்றால் அவர்களை நீங்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்படும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் ஃபண்ட போன்ற எல்லாவிதமான யூக வணிகங்களில் இருப்பவர்களும் முதலீடு செய்யுங்கள்; ஓரளவுக்கு நல்ல ரிட்டன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது. இந்த வாரத்தில் எதிர்பாராத பணவரவு, தனவரவு இருக்கிறது. முன்னோர்களுடைய சொத்து இல்லாதவர்களுக்கு கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் வரவு இருக்கிறது. நீண்ட நாட்களாக வராத பென்ஷன், பி.எஃப், கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் ஆகிய பணங்கள் அத்தனையும் இந்த வாரத்தில் வந்துவிடும்; அல்லது தவணை முறையில் வர வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. உயர் கல்வியில் தடை ஏற்பட வேண்டிய காலமாக உள்ளது. மணவாழ்க்கை ஓரளவு மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்கும். சொந்த தொழில் பரவாயில்லாமல் இருக்கும். கூட்டுத்தொழிலில் இருவருமே லாபம் அடைவீர்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்