கடன், நோய்கள் குறையும்

Update:2024-10-01 00:00 IST

2024 அக்டோபர் 01-ஆம் தேதி முதல் அக்டோபர் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட், எதிர்பாராத டூர், டிராவல் ஆகியவை இருக்கிறது. மேலும் தெய்வ தரிசனமும் உள்ளது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. ஒருவாரத்திற்குள் சம்பள உயர்வு, பணி உயர்வு கிடைக்குமா? என்றால் வாய்ப்புகள் உள்ளன. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். முயற்சி எடுத்து உங்கள் வேலையை செய்தால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ், மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். எல்லாவிதமான யூக வணிகங்களும் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம், அவற்றால் மகிழ்ச்சி, சந்தோஷம் என இவை அத்தனையும் இந்த வாரம் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவை எதிர்பார்ப்பவர்களுக்கு, அவரால் நற்பலன்கள் உண்டு. சொந்த தொழில், கூட்டுத் தொழில் இரண்டுமே சுமாராக உள்ளது. மணவாழ்க்கையை பொறுத்தவரை ஏதோவொரு வகையில் மகிழ்ச்சி, சந்தோஷம் இருந்துகொண்டே இருக்கும். பெரிய அளவில் தொழில் தொடங்க வேண்டும், தொழில் முனைவோராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள் கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடன் மற்றும் நோய், நொடிகள் இருந்தால் அவை குறையும். வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்