வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள்
2024 ஆகஸ்ட் 06-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. கையில் பணம், தனம் இருக்கும். வருமானத்திற்கு ஏற்ற செலவினங்களும் இருக்கிறது. மணவாழ்க்கை பரவாயில்லை. உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்பாவால் நன்மைகள் உண்டு. எதிர்பார்த்த மாதிரியான நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வெளிநாட்டு தொடர்புகள் அத்தனையுமே ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை உண்டு. நல்ல நட்பு வட்டாரத்தால் நற்பலன்கள் ஏற்படும். பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு பரவாயில்லை. கூட்டுத் தொழிலில் பார்ட்னருக்காக நீங்கள் உழைப்பீர்கள். ஆராய்ச்சி தொடர்பாக படிக்க நினைப்பவர்கள் படிக்கலாம். பேச்சின் மூலமாக வருமானத்தை சம்பாதிப்பவர்களுக்கு வருமானங்கள் சுமார். உங்கள் இஷ்ட தெய்வத்தை பிரதானமாக வழிபாடு செய்யுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சளி மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கவனம். கணவன் - மனைவி இருவரில் பிரிவு அல்லது யாராவது ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் இருக்கிறது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கையில் ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். உங்கள் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். எல்லாவிதமான வழக்குகளில் இருந்தும் விடுபடுவீர்கள். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யுங்கள்.