பணம், பொருள் முடங்கும்

Update:2024-11-19 00:00 IST

2024 நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலை நன்றாக உள்ளது. வருமானங்கள் இருக்கும் அதே அளவுக்கு செலவுகளும் இருக்கிறது. தொழில் சுமாராக உள்ளது. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம்; உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. பணம், பொருள் முடங்க வாய்ப்புள்ளது. அதனால், கவனமாக இருங்கள். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிதாக முன்னேற்றம் இல்லை. ஷேர் மார்க்கெட்டிலும் லாபம் வருவது போன்ற தோற்றம்; அதுவும் சுமாராக இருக்கிறது. எதிர்பாராத என்டெர்டெயின்மென்ண்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கின்றன. அதற்காக நிறைய செலவு செய்வீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு உண்டு. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும். உயர்கல்வி நன்றாக உள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக வரும். எது எப்படி இருந்தாலும் உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி காப்பாற்றப்படும். வேலை, வாய்ப்புகளும் நன்றாக உள்ளது. அவசரப்பட்டு வேலையை விட்டுவிடாதீர்கள். உங்கள் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் மட்டும் வேலையில் மாற்றம் செய்யுங்கள். இல்லையென்றால் அடக்கி வாசியுங்கள். பணிச்சுமை அதிகமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும், பைரவருடைய வழிபாட்டை பிரதானமாக செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்