திருமணத்தை தள்ளிப் போடுங்கள்
2025 மார்ச் 18-ஆம் தேதி முதல் 2025 மார்ச் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத தெய்வ அனுகூலம், மகிழ்ச்சி, சந்தோஷம் என அத்தனையும் இந்த வாரமும் தொடரும். நீண்ட காலமாக தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே தொழில் செய்பவர்களுக்கு சுமாராக இருக்கிறது. புரொடக்ஷன் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், லாபம் இல்லை. அம்மாவின் அன்பு, ஆதரவு கிடைப்பதில் நிறைய தடை இருக்கிறது. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். உயர்கல்வி நன்றாக உள்ளது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் முயற்சி செய்யுங்கள். இல்லையென்றால் கிடைக்க வேண்டியவற்றில் நிறைய தடைகள் இருக்கிறது. வேலையில் மாற்றங்கள் உண்டு. தொழில் சுமார். எவ்வளவு முதலீடு செய்தாலும் ரிட்டன்ஸ் கிடைப்பதில் நிறைய போராட்டங்கள் இருக்கிறது. பிசினஸ் செய்பவர்களுக்கு தொழில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கிறது. அதற்காக தொழில் இல்லாமல் இல்லை. விட்டு விட்டு நடக்கும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவர்கள் பொருளாதார வசதி இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். திருமணம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தால் தள்ளிப்போடுங்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் வர வேண்டிய பணங்கள் வருவதில் நிறைய தடைகள் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.