புதிய முயற்சிகள் வேண்டாம்
2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பிரச்சினைகள், மனவருத்தங்கள், போராட்டங்கள் ஏற்படும் போதெல்லாம் அதை தீர்த்து வைப்பதற்கு யாராவது வருவார்கள். உங்கள் சொத்துக்கள் எதிர்பார்த்த விலைக்கு போக வாய்ப்புள்ளது. அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத பயணங்களை தவிருங்கள். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். ஏனென்றால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை. சொந்தமாக வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான சூழ்நிலைகள் உள்ளது. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கிறது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். வழக்குகளில் வெற்றி கொள்ள வாய்ப்புள்ளது. தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து போக வாய்ப்புள்ளது.இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.