தேவையற்ற செலவுகள்
2024 டிசம்பர் 31-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மெண்ட் இருக்கிறது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மை; எதிர்பாராத தெய்வ தரிசனம், அதனாலும் நன்மை இவை அனைத்தும் இருக்கிறது. கையில் பணம் இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றால் தேவையற்ற செலவினங்கள் ஏற்படும். வேலையில், ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. வேலை நிமித்தமாக வெளியூர், வெளிநாடு போக நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். தொழிலில் லாபம் வருவது மாதிரியான ஒரு தோற்றம்; ஆனால் லாபம் இல்லை. அதனால் உங்கள் தொழிலில் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். திருமணம் தள்ளிபோனவர்களுக்கு திருமணம், இரண்டாம் திருமணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து இருக்கிறது. அவசரம், அவசியம் இருந்தால் தவிர கடன் வாங்காதீரகள். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உதவி செய்வார்கள். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவீர்கள். இந்த வாரம் முழுவதும், ஆஞ்சநேயர் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.