உடல் ஆரோக்கியத்தில் கவனம்

Update:2024-11-12 00:00 IST

2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். என்டெர்டெயின்மென்ட், டூர், டிராவல் ஆகியவை இருக்கும். வேலையிலும் கவனம் செலுத்துங்கள். உயர் அதிகாரி உங்களுக்கு வேலையில் ஒத்துழைப்பு தர வாய்ப்புள்ளது. ஏதாவது ஒன்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். பி.ஆர்., கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு விற்பனை இருக்கிறது. வருமானம் சுமார். விவசாயத் துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. நீங்கள் யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான வேலையாட்கள் அமைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் கவனமாக இருங்கள். வேலை, வாய்ப்புகளும் நன்றாக இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். இன்னும் கொஞ்சம் தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். உயர் கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முழுவதும், பைரவருடைய வழிபாட்டை பிரதானமாக செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்