காரியத்தடங்கல் உண்டாகும்
பணியிடத்தில் தவறான புரிதல், கெட்ட பெயர் ஏற்படலாம்.
By : ராணி
Update:2023-08-08 00:00 IST
2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
சூரியன் 12-ஆம் இடத்தில் இருப்பதால் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். காரியத்தடங்கல் உண்டாகும். தலை சம்பந்தமான உபாதைகள் உண்டாகலாம். 14-ஆம் தேதி தவிர்த்து மற்ற நாட்கள் நன்றாக இருக்கும். பயணங்கள் மூலம் உடல்நலக் குறைவு ஏற்படும் என்பதால் திட்டமிட்டு வசதியான பயணமாக அமைத்துக் கொள்ளவும். பணியிடத்தில் தவறான புரிதல், கெட்ட பெயர் ஏற்படலாம். மகாலட்சுமிக்கு வெள்ளை மொச்சை இட்டு விளக்கேற்றவும்.