அறிவாற்றலுடன் செயல்படுவீர்கள்

சனி பகவான் உங்களை பார்ப்பதால் சற்று மந்த புத்தியும், சோம்பேறித்தனத்தையும் ஏற்படுத்தும்.

Update:2023-10-03 00:00 IST

2023, அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

இந்த வாரம் மிகவும் புத்தி கூர்மையுடனும், அறிவாற்றலுடனும் செயல்பட போகிறார்கள். சனி பகவான் உங்களை பார்ப்பதால் சற்று மந்த புத்தியும், சோம்பேறித்தனத்தையும் ஏற்படுத்தும்.இந்த விஷயத்தை சரி செய்து கொண்டால் நீங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியடைவீர்கள். உங்கள் ராசியில் சுக்ரபகவான் அமர்ந்துள்ளதால் பெண்கள் வழியிலும், தொழில் முறையிலும் சற்று சாதகமான சூழல் ஏற்படும். 5, 6, 7 தேதிகளில் லாபம், வெளிநாடு மற்றும் தூரதேச பயணம் செய்வதன் மூலம் அதீத நற்பலன் கிடைக்கும். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கை கூடி வரும். பொருள் விரையம் ஏற்படும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்