எதிரிகளை ஜெயிப்பீர்கள்

Update:2024-08-20 00:00 IST

2024 ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கக்கூடிய சம்பாத்தியங்கள் உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ, பொருளாகவோ வரும். அதை நீங்கள் தக்கவைக்க வேண்டும். இல்லையென்றாலும் 12-ஆம் இடத்தில் கிரகங்கள் இருப்பதால் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும். தேவையில்லாத செலவினங்கள் வேண்டாம். எதிர்பாராத பயணம் இருக்கிறது. அந்த பயணம் ஏதோவொரு விதத்தில் திருப்தியற்ற மன நிலையை ஏற்படுத்தும். அவசரம், அவசியம் இருந்தால் தவிர பயணத்தை தவிர்த்து விடுங்கள். பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். எல்லாம் வெற்றி பெறுவது போன்ற தோற்றம். ஆனால், வெற்றிகள் இல்லை. சொந்தமாக இடம், வீடு, வீட்டு உபயோகப்பொருட்கள், வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புள்ளது. கல்வி நன்றாக உள்ளது. ஷேர் மார்க்கெட், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் பண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்யுங்கள். பின்னால் நல்லதொரு லாபத்தை கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது. யூக வணிகங்கள் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு சாதகமாக இருக்கிறது. வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு வெற்றியையும், வருமானத்தையும் கொடுக்கும். பெரிய அளவில் வழக்குகள் இருந்தால் அதில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை ஜெயிப்பீர்கள் சொந்த தொழில் சுமார். கணவன் - மனைவி இருவரின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் மகாலட்சுமியை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்