பொறுமை அவசியம்

Update:2024-02-13 00:00 IST

2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். புதிய முயற்சிகள் செய்ய வேண்டாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உறவுகள், அண்டை, அயலார் விஷயங்களில் கவனம் தேவை. வீடு இடம் மாற்றம், சொத்துக்களை விற்பது போன்றவற்றில் மிகவும் பொறுமையாக இருப்பது நல்லது. அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் சுமாராக இருக்கும். உங்களுடைய உயர்கல்வியில் பிரேக் இருக்கும். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். விசா, பாஸ்போர்ட் வராதவர்கள் பொறுமையாக காத்திருப்பது நல்லது. வேலையில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் உழைப்புக்கேற்ற ஊதியம் இருக்காது. முருகன் மற்றும் சிவன் கோயிலில் இருக்கும் அம்பாளின் வழிபாடு நன்மையை தரும்.    

Tags:    

மேலும் செய்திகள்