தேவைகள் பூர்த்தியாகும்

Update:2023-12-12 00:00 IST

2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவருக்குமிடையே புரிதல் குறைவாக இருக்கும். தொழிலில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும். லோன் கிடைப்பதோடு தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் கவனம் அவசியம். நிறுவனம் மாற நினைப்பவர்கள் மாறலாம். நட்பு வட்டாரம் நன்றாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. விநாயக வழிபாடு மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்