காதல் கைகூடும்

Update:2023-11-07 00:00 IST

2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.

வாரத்தில் முதல் பாதி சற்று சிக்கலாகவே இருக்கும். பண வரவு, பணம் கொடுக்கல் வாங்கலில் சில பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும், விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் வாரத்தில் இரண்டாம் பகுதியில் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்வீர்கள். காதலிப்பவர்களுக்கு காதல் கைகூடும். புதிய உறவுகள் மற்றும் நட்புகளால் ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. பிரயாணங்களால் ஆதாயம் கிட்டும். சொந்த வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்கள் 10ஆம் தேதிக்கு பிறகு வாங்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்