தாய் - தந்தை உதவி கிட்டும்
தாய் - தந்தையின் உதவி அதிகமாக கிடைக்கும். வேலையினால் சிறுசிறு உடல்நல பிரச்சினைகள் வரலாம்.;
By : ராணி
Update:2023-09-12 00:00 IST
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் சூப்பராக இருக்கும். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். பொருளாதாரத்தில் சற்று தொய்வு ஏற்படும். கணவன் - மனைவி உறவு சிறக்கும். இணைந்து செயல்படுவீர்கள். தாய் - தந்தையின் உதவி அதிகமாக கிடைக்கும். வேலையினால் சிறுசிறு உடல்நல பிரச்சினைகள் வரலாம். குறிப்பாக கால் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரும் வாய்ப்புகள் உண்டு. வேலை ஸ்தலத்தில் சீனியர்களுடன் கருத்து வேறுபாடு வரும் வாய்ப்புகள் உண்டு. உடன் பிறந்தவர்களின் உதவி சமயத்தில் கிட்டும்.