உறவுகளை பிரிய வேண்டிய காலம்

Update:2024-09-24 00:00 IST

2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடன் பெற்றோ, லோன் வாங்கியோ நிரந்தரமான சொத்துக்களை வாங்க வாய்ப்புள்ளது. நிறைய வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான சூழலும் ஏற்படும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா? என்றால் சுமாராக இருக்கும். கடின முயற்சிகள் எடுத்தாலும் அவை வெற்றி பெறுவதில் சிரமங்கள் இருக்கின்றன. உறவுகள் குறிப்பாக இளைய சகோதர - சகோதரிகளுக்கு செலவு செய்வதற்கான வாரமாக உள்ளது. நெருங்கிய உறவுகளை விட்டு பிரிந்து போவதற்கான காலம். அவர்களுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய காலமாக இருக்கிறது. உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் ஒரே மாதிரி இருந்தால்தான் பின்னாளில் வெற்றிகரமாக வர முடியும். தொழில் மற்றும் கணவன் - மனைவி உறவு இரண்டுமே சுமாராகத்தான் உள்ளது. வைத்தியச் செலவுகள் இருக்கின்றன. கிரக நிலைகள் சாதகமாக உள்ளதால், உயர்கல்விக்காக வெளிநாடு போக நினைப்பவர்கள் தாராளமாக போகலாம். வேலையில், வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களும் முயற்சி செய்யலாம். எது எப்படி இருந்தாலும், இந்த வாரம் முழுவதும் பிரம்மாவையும், மகாலட்சிமியையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்