பேச்சை குறையுங்கள்
2024 டிசம்பர் 17-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. வேலையில் எதிர்பார்த்த மாற்றம், முன்னேற்றம் நிச்சயம் உண்டு. வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். நேர்காணல்களில் பங்கு பெற்றிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். கல்வி நன்றாக உள்ளது. நீண்ட தூர பயணம் செய்ய வாய்ப்புள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். மணவாழ்க்கை சுமார். கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன கருத்துவேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. பேச்சை குறைப்பது முக்கியம். இந்த வாரம் முழுவதும், முருகப்பெருமான் மற்றும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய அம்பாளையும் வழிபாடு செய்யுங்கள்.