எதிரிகளை ஜெயிப்பீர்கள்

Update: 2024-12-09 18:30 GMT

2024 டிசம்பர் 10-ஆம் தேதி முதல் டிசம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் பெரிய மாற்றங்கள் இருக்கிறது. ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கண்டிப்பாக உண்டு. புரமோஷன், ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். நீங்கள் நினைப்பது அனைத்தும் நடக்கும். நேரடியாக, மறைமுகமாக உள்ள எதிரிகளை ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். எல்லாவிதமான வெற்றிகளையும் அடைவதற்கான வாரமாக இந்த வாரம் உள்ளது. மணவாழ்க்கை சுமார். கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையில்லாத செலவுகள், விரயங்கள் இருக்கிறது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் கண்டிப்பாக வரும். அப்பாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து இருக்கிறது. இருந்தும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்