அனைத்திலும் வெற்றி உறுதி

Update: 2024-11-25 18:30 GMT

2024 நவம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 02-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தொழில் பரவாயில்லாமல் உள்ளது. கணவன் - மனைவி இருவரில் யாராவது ஒருவருக்கு தேவையற்ற விரயங்கள், செலவினங்கள், நஷ்டங்கள், வைத்தியச் செலவுகள் இருக்கிறது. வேலை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கிறது. எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கிறது. வேலையில் உங்களின் கடின முயற்சிகளுக்கான அங்கீகாரம் பெரிய அளவில் உண்டு. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதி ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். உதவித்தொகையை எதிர்பார்ப்பவர்களுக்கு அது கிடைக்கும். இந்த வாரத்தை பொறுத்தவரை உங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டதாக இருக்கும். உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கல்வி நன்றாக உள்ளது. உயர்கல்விக்காக வெளிநாடு, வெளிமாநிலம் செல்ல நினைப்பவர்கள் முயற்சி செய்யலாம். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. உற்பத்தி துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானங்கள் உண்டு. நீங்கள் நினைப்பது அனைத்தும் வெற்றியடையும். இந்த வாரம் முழுவதும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய பைரவரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்