செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும்

Update:2024-11-05 00:00 IST

2024 நவம்பர் 05-ஆம் தேதி முதல் நவம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலம் இருக்கிறது. எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். நினைத்த விஷயங்கள் நடக்கும். எந்த துறை சார்ந்து போட்டித்தேர்வுகள் எழுதி இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையில் பணி உயர்வு எதிர்பார்த்தால் கிடைக்கும். சம்பள உயர்வு, போனஸ் எதிர்பார்ப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் கடந்த காலங்களில் கிடைக்காத அங்கீகாரம், இந்த வாரத்தில் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் அதில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு உள்ளது. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். தொழிலை பொறுத்தவரை முதலீடு செய்யுங்கள்; எதிர்காலத்தில் நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்க வாய்ப்புள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். செல்வம், செல்வாக்கு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல லாபத்தை கொடுக்கும். இந்த வாரம் முழுவதும் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்