செலவினங்கள் அதிகரிக்கும்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு, அதற்காக செலவு செய்ய கூடிய சூழ்நிலைகள் இருக்கிறது. சுப செலவினங்கள் அதிகமாவே இருக்கிறது; இல்லையென்றால் உங்கள் குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்ய வேண்டிய வாரமாக அமையும். உங்கள் கையில் பணம், தனம் இருந்தால் கூட பேச்சை குறையுங்கள். எந்த அளவுக்கு பொறுமையாகவும், நிதானமாகவும் பேசுகிறீர்களோ அந்த அளவுக்கு நல்லது. பேச்சு தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறும். நினைத்தது நடக்கும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். தொடர்புகொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். சிறு தொழில், சுயதொழில், வீட்டில் வைத்து தொழில், ஆன்லைன் பிசினஸ், பிளாட்பார தொழில் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம், வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கிறது. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது; ஆனால், வருமானம் குறைவு. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் மிக கவனம் தேவை. வேலையை பொறுத்தவரை எந்த துறையில் இருந்தாலும் நன்றாக இருக்கிறது. உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வேலையின் நிமித்தமான பயணம் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். உயர்கல்வி நன்றாக உள்ளது. இந்த வாரம் முழுவதும் சனிபகவானையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்