முதலீடு வேண்டாம்

Update:2024-10-08 00:00 IST

2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசிநாதன் புதன் 5-ஆம் இடத்தில் இருப்பதால் உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் இருக்கிறது. பெரியளவில் கடன் மற்றும் நோய் இருந்தால் அவை இரண்டுமே குறையும். கடன் கேட்டிருந்தால், லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய நேரடியான, மறைமுகமான எதிரிகள் யாராக இருந்தாலும் ஜெயிப்பீர்கள். பெரியளவில் பிசினஸ், பார்ட்னர்ஷிப்போடு பிசினஸ் செய்பவர்களுக்கு சுமாராக உள்ளது. தொழிலில் நஷ்டம் இருக்கிறது. மணவாழ்க்கையில் உங்கள் துணையை பிரிய நேரலாம்; அல்லது அவருக்கு வைத்தியச் செலவுகள் செய்ய வேண்டி வரும். உயர்கல்வியை வெளிநாட்டில் தொடர நினைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். வேறு அலுவலகம் மாற வேண்டும், வேலையை விட்டு போக வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. நீண்ட தூரம் பயணம் செய்யவும் வாய்ப்புள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. அம்மாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். கிரக நிலைகள் சாதகமாக இல்லாததால், விட்டதை பிடிக்கிறேன் என்று பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்ற எந்த யூக வணிகங்களிலும் முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம்; பணம் பொருள் உங்கள் கண்முன்னாடியே பறிபோகும் மாதிரியான காலம். இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மாவையும், துர்க்கையையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்