குழப்பங்கள் வேண்டாம்

Update:2024-08-13 00:00 IST

2024 ஆகஸ்ட் 13-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் செய்திகள் அனைத்தும் ஏதோவொரு வகையில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். துணிந்து சில முடிவுகளை எடுங்கள். யாரை நம்பி இருக்கிறீர்களோ அவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நன்மைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு. நீண்ட நாட்களாக விற்காமல் இருந்த சொத்துக்கள் விற்பனையாகும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப, சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோசத்தை கொடுக்கும். கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் லாட்டரி, ரேஸ், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் செய்யலாம். உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். வேலையை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை. நல்லதொரு முன்னேற்றம் உண்டு. ஏதோவொரு வேலை, வருமானம், சம்பாத்தியம் என்பது இருக்கும். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். ஏனென்றால் கடன் குறைவதற்கான வாரமாக இந்த வாரம் இருக்கிறது. நோயின் தன்மையும் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டு. தொழிலில் முதலீடுகள் எதுவும் வேண்டாம். இந்த வாரம் முழுவதும் முருகர் மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.    

Tags:    

மேலும் செய்திகள்