முதலீடு வேண்டாம்

Update:2024-07-30 00:00 IST

2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார நிலைகள் நன்றாக இருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். இல்லையென்றாலும் உங்களின் குழந்தைகளுக்காக செலவு செய்யுங்கள். அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாவிட்டால் அவர்களை விட்டு நீங்கள் பிரிந்து இருப்பீர்கள் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிந்து இருப்பார்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால், வருமானம் குறைவு. இந்த வாரம் முழுவதும் அம்மாவுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத செலவுகள், விரயங்கள் இருந்து கொண்டே இருக்கும். இந்த வாரத்தில் எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம். ஆனால், லாபம் இல்லை. அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். வேலையை பொறுத்தவரை சுமாராக இருக்கிறது. இருந்தாலும் உங்கள் சர்வீஸ் ஸ்தானத்தை குரு பகவான், சனி பகவான், செவ்வாய் பகவான் எல்லோரும் சேர்ந்து பார்ப்பதால் நீங்கள் எந்த வேலை பார்த்தாலும் ஓரளவுக்கு பரவாயில்லாமல் இருக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் உங்களை விட்டு பிரிந்து இருப்பார் அல்லது திருப்தியற்ற மனநிலையில் இருப்பார். கணவன் - மனைவி இருவரில் பிரிவு அல்லது யாராவது ஒருவருக்கு வைத்தியச் செலவு இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்