குழந்தை பாக்கியம்

Update:2024-06-25 00:00 IST

2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை கையில் பணம் இருக்கும். யாருக்காவது கடன் கொடுத்தால் அது திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களது பணம் மொத்தமாக முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. பெரிய அளவில் முயற்சிகள் ஏதும் வேண்டாம். கல்வி சிறப்பாக உள்ளது. இடம், வீடு, நகை, புதிதாய் ஆடைகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு புகழ் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்காது. பெரிய அளவில் நோய் இருப்பவர்களுக்கு அதன் தன்மை குறைய வாய்ப்புள்ளது. அதேபோல் கடன் குறையவும் வாய்ப்புள்ளது. சொந்த தொழில் பரவாயில்லை. யாருக்கும் கடன் கொடுக்கதீர்கள். அறுவை சிகிச்சை ஏதேனும் செய்வதாக இருந்தால் இந்த வாரத்தில் செய்யுங்கள். அப்பாவால் நன்மைகள் உண்டு. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். உங்களின் நட்பு வட்டாரம் பெரிய அளவில் டெவலப் ஆகும். இந்த வாரம் முழுவதும் பைரவர் மற்றும் கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள் முன்னேற்றம் ஏற்படும்.

Tags:    

மேலும் செய்திகள்