எண்ணங்கள் செயலாக்கம் பெறும்

Update:2025-04-01 00:00 IST

2025 ஏப்ரல் 01-ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 07-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ, ஆலய தரிசனம் உண்டு. மதத்தின் மீது பற்று, ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு உருவாகும். அதற்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி கிடைக்கும். பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் வருமானத்தை சம்பாதிப்பீர்கள். உங்களின் எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறும். உங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யாராவது வருவார்கள். வேலையில் நீங்கள் நினைத்த அத்தனையும் கிடைக்கும். வேலை தொடர்பான நேர்காணல்களில் கலந்துகொண்டிருந்தால் தேர்வு செய்யப்படுவீர்கள். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு போகும். தொழில் சுமார். இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, எதிர்பாராத நட்பு உண்டாகும். இந்த வாரம் முழுவதும், முருகன் மற்றும் குலதெய்வத்தை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்