முயற்சிகள் எதுவும் வேண்டாம்

Update:2025-02-18 00:00 IST

2025 பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் குழந்தைக்கான வாய்ப்பு மட்டுமின்றி அதற்காக சிகிச்சை எடுத்தாலும் அதிலும் வெற்றி கிடைக்கும் வாரமாக உள்ளது. மேலும், குழந்தைகளால் நன்மைகள், மகிழ்ச்சி அத்தனையும் உண்டு. தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள் இருந்தாலும், செலவினங்களும் இருக்கிறது. நன்கு செலவு செய்வதற்கான காலகட்டத்தை கிரகங்கள் உருவாக்கும். பெரிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். வேலையை பொறுத்தவரை சுமார். எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைப்பது சிரமம்தான். எல்லோருடனும் பொறுமையாக விட்டுக் கொடுத்து செல்லுங்கள். இந்த வாரத்தில் நல்ல நண்பர்கள் குறிப்பாக அந்நிய மொழி பேசும் நண்பர்கள் கிடைப்பார்கள். இந்த வாரம் முழுவதும், சிவனையும், முருகனையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்