குழந்தை பாக்கியம் உண்டு
2025 பிப்ரவரி 04-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் உண்டு. குழந்தைகளுக்கு சுபகாரியங்கள், நன்மைகள் நடைபெற வாய்ப்புள்ளது. இவற்றிற்கெல்லாம் கையில் பணம் இருக்குமா என்றால் பொருளாதார வசதிகள் நன்றாக இருக்கும். நீங்கள் உழைத்து சம்பாதிக்கும் சம்பாத்தியங்கள் உங்களுக்கு கை கொடுக்கும். நல்ல நட்பு கிடைக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. ஆனால், லாபம் சுமார். வேலை, வாய்ப்புகள் பரவாயில்லை. அரசு வேலைகளுக்கு தேர்வு எழுதி ரிசல்ட்டுக்காக காத்திருப்பவர்கள் தேர்ச்சி பெறுவீர்கள். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும், துர்க்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.