எதிர்பாராத தெய்வ தரிசனம்

Update:2025-01-14 00:00 IST

2025 ஜனவரி 14-ஆம் தேதி முதல் 2025 ஜனவரி 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

மகிழ்ச்சி, சந்தோஷகரமாக இருக்க வாய்ப்புள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் இருக்கிறது. குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு, அதற்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மகிழ்ச்சியான விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பேச்சின் மூலமாக சம்பாதிப்பவர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. வேலை வாய்ப்புகளை பொறுத்தவரையில், ஒருபக்கம் வேலை இருக்கிறது; ஆனால் முன்னேற்றம் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இருக்கிறது. வேலையில், பணி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழில் பரவாயில்லை. புதிய காதல் மலரவும், அந்த காதல் வெற்றியடையவும் வாய்ப்புள்ளது. வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். மணவாழ்க்கையில் கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் உண்டு. இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் பைரவரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்