வேலையில் மாற்றங்கள் உண்டு

Update: 2024-09-09 18:30 GMT

2024 செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் செப்டம்பர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம், என்டெர்டெயின்மென்ட் ஆகியவை இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டு. பெரிய அளவில் உடல் உழைப்பு இல்லாமல் சம்பாத்தியம் செய்வதற்கான வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள், அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். வேலையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. வேலையில் மாற்றங்கள், முன்னேற்றங்கள் எதிர்பார்த்தவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்புகள் இருக்கிறது. வேறு அலுவலகம் மாற நினைப்பவர்களுக்கும் கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. சொந்த தொழில் சுமார். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். உங்கள் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். நீங்கள் நினைப்பது நடப்பதற்கான வாய்ப்பு, சூழ்நிலைகள் உருவாகும். நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். நல்லது நடக்கும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ செய்யாதீர்கள். உயர்கல்வியை தொடர்வதில் சிறிய தடை என்பது இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் சிவனையும், பெருமாளையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்