புதிய முயற்சிகள் வேண்டாம்

Update:2024-10-22 00:00 IST

2024 அக்டோபர் 22-ஆம் தேதி முதல் அக்டோபர் 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் கையில் பணம், தனம், பொருள் இருக்கும். அந்த பணம் பின்னாளில் உங்களுக்கு உதவி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிறைய தடைகள் ஏற்பட்டுதான் நடக்கும். அதனால் புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைக்கான வாய்ப்பு, சந்தர்ப்பங்கள் உருவாகும். குழந்தைக்காக சிகிச்சை எடுத்தாலும் வெற்றி பெறும். எதிர்பாராத தெய்வ மற்றும் ஆலய தரிசனம் ஏற்படும். சமூகத்தில் உங்களுக்கான அந்தஸ்து, மதிப்பு கூடும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. வருமானம் இல்லை. கல்வி நன்றாக உள்ளது. மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. பெண் நண்பர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உதவி செய்வார்கள்; அல்லது சாதகமாக இருப்பார்கள். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. நோய், கடன் குறைய வாய்ப்புள்ளது. உங்களின் கௌரவம், அந்தஸ்து கூடும். விருப்பங்கள், ஆசைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் முழுவதும் பைரவரையும், நரசிம்மரையும் வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்