பேச்சை குறையுங்கள்

Update:2024-10-15 00:00 IST

2024 அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் நினைக்கும் காரியங்கள் வெற்றியோடு நடக்கும். பொருளாதாரம் கை கூடி வரும். மணி ரொட்டேஷன் இருக்கும். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் சம்பாத்தியங்கள் உங்கள் கையில் பணமாகவோ, தனமாகவோ, பொருளாகவோ இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். நிரந்தரமாக சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் வாங்கலாம். லோன் அல்லது கடன் வாங்கியாவது வாங்குவதற்கான வாய்ப்புகள் சந்தர்ப்பங்கள் உருவாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து கிடைக்கும். வருமானங்கள் கூடும். அரசியல் வாழ்க்கை மிகப்பெரிய மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் கொடுக்கும். வேலையில் மாற்றம் செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சொந்த தொழில் நன்றாக இருக்கும். ஒன்றிக்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கும் சுமாராக இருக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். பாஸ்போர்ட், விசாவுக்கு விண்ணப்பித்திருந்தால் வரும். அப்பாவால் நன்மைகள் உண்டு. எது எப்படி இருந்தாலும் உங்களின் எண்ணம், ஆசை, அபிலாஷைகள் பூர்த்தியாகும். மூத்த சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. நல்ல நட்பு அமையும். அவர்களால் நன்மைகள் உண்டு.பிரிந்த நண்பர்கள் சேர்வார்கள். பேச்சை குறைத்து உழைப்பை அதிகப்படுத்துங்கள். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப்படுத்துங்கள். இந்த வாரம் முழுவதும் முருகனையும், நரசிம்மரையும் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்