காதல் மகிழ்ச்சியை தரும்

Update:2024-10-08 00:00 IST

2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் நினைப்பது ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு நடக்கும். நேர்காணலில் கலந்துகொண்டு இருந்தால் தேர்வாவீர்கள். நீங்கள் எதிர்பார்க்கும் செய்திகள் அத்தனையும் உங்களுக்கு சாதகமாக வரும். சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் நல்ல விலைக்கு போக வாய்ப்புள்ளது. கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் உங்களை எந்த அளவுக்கு டெவலப் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு உங்களின் வெற்றி உறுதியாகும். கடன் வாங்கியாவது புதிய மனை, வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு, ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பரவாயில்லை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். உங்கள் காதல் விஷயங்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத டூர், டிராவல் இருக்கிறது. சொந்த தொழிலும் சுமாராக உள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட இடங்களில் தொழில் தொடங்குவதற்கான சூழல்கள் உருவாகும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். நிலுவையில் உள்ள பணங்கள் நீண்ட நாட்களாக வராமல் இருந்தால் வரும். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமியையும், சிவனையும் வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்