காதலில் பிரச்சினை

Update:2024-11-12 00:00 IST

2024 நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இயற்கையாகவே தெய்வ அனுகூலம் கிடைக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசியுங்கள். எதிர்பாராத ஆலய தரிசனம் அமையும். கையில் பணம், தனம், பொருள் இருக்கிறது. அதற்கு ஏற்ற செலவினங்களும் உண்டு. குழந்தைகளுக்காகவும், கோவில், பொழுதுபோக்கு போன்ற நிகழ்வுகளுக்காகவும் செலவு செய்ய வேண்டிய வாரமாக இருக்கிறது. பெரிய அளவில் முயற்சிகள் எதுவும் வேண்டாம். நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடைகள் என்பது இருந்துகொண்டே இருக்கும். அதனால் அந்த விஷயத்தில் கவனம் தேவை. மதம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூக செயல்பாடுகள் கூடும். யாருக்கும் பணம் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வருமானங்கள் உண்டு. உயர்கல்வி நன்றாக உள்ளது. இரண்டாம் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் காதல் வெற்றியடைவதில் நிறைய தடைகள், பிரச்சினைகள் என்பது இருந்துகொண்டே இருக்கிறது. நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. தேவையில்லாத விஷயங்களை பேசாதீர்கள். பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். இந்த வாரம் முழுவதும் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்