அந்தஸ்து கூடும்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. உங்களின் முயற்சிகள் ஏதோவொரு விதத்தில் நன்மையாக முடியும். ஆனாலும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை. நீங்கள் நம்பியவர்கள் ஏதோவொரு விதத்தில் உங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருப்பார்கள். நீங்கள் பேச நினைப்பவர்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பெரிதாக லாபம் ஒன்றும் இல்லை. உங்களின் புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. அதற்கு லாபம் இல்லை. எல்லா விஷயத்திலும் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். கல்வி, உங்கள் மற்றும் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். சொந்த தொழில் மற்றும் கூட்டுத் தொழில் இரண்டுமே சுமார். வேலையை பொறுத்தவரை, வேலையை விட்டு நிற்க வேண்டிய கால கட்டங்கள் அல்லது வேலையில் இருந்து வி.ஆர்.எஸ் பெற வேண்டிய சிந்தனைகள் என எல்லாமே இந்த வாரம் உங்களுக்கு உண்டு. நோயில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்கள் அடக்கி வாசியுங்கள். முதலீடுகள் ஏதும் வேண்டாம். மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. இந்த வாரம் முழுவதும் பகவான் கிருஷ்ணர் மற்றும் முருகனை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்