வருமானம் உண்டு

Update: 2024-01-08 18:30 GMT

2024 ஜனவரி 9 முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் அனைத்துமே வெற்றியடையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக அமையும். எதிர்கால திட்டங்களை இப்போதிருந்தே வகுத்தால் வெற்றி அமையும். உறவுகளை வலுப்படுத்தாவிட்டால் சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்படும். நெருங்கிய உறவினர்களைவிட்டு பிரிய வாய்ப்புகள் உள்ளது. அம்மாவின் உண்மையான அன்பும், ஆதரவும் கிடைக்கும். உற்பத்திக்கு தகுந்த வருமானம் உண்டு. நிரந்தர சொத்துகள் வாங்க வாய்ப்புகள் உள்ளன. காதல் மகிழ்ச்சி தரும். புது காதல் மலரலாம். கலைத்துறையில் முன்னேற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட், லாட்டரி, ஆன்லைன் ட்ரேடிங்கில் பெரிய முதலீடு வேண்டாம். கம்பெனி மாற நினைப்பவர்கள் முயற்சிக்கலாம். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் பார்ட்னர் லாபமடைவார். தேவையில்லாமல் கடன் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிவ வழிபாடு, முருக தரிசனம் செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்