தனித்திறமைகளுக்கு அங்கீகரிப்பு
குடும்பத் தலைவிகளின் பொறுப்பினை ஆண்கள் உணர்ந்துகொள்வார்கள். தனித் திறமைகளை, தலைமைப் பண்புகளை கணவர் மற்றும் குழந்தைகள் அங்கீகரிப்பார்கள்.
By : ராணி
Update:2023-07-11 11:24 IST
மனம் மகிழ்கின்ற நல்ல மாதம் இது. அடிக்கடி பயணம் செல்வதன் மூலமாகவோ அல்லது வடக்கு திசையிலிருந்தோ நல்ல தகவல்கள் வரும். கடந்த ஆண்டு வயதுக்கு ஏற்றாற்போல் ஜென்ம சனியின் ஆதிக்கத்தால் கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு, இந்த மாதம் கஷ்டங்கள் அனைத்தும் தீரும். குறிப்பாக கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த பெண்களுக்கு அவை விலகும். குடும்பத் தலைவிகளின் பொறுப்பினை ஆண்கள் உணர்ந்துகொள்வார்கள். தனித் திறமைகளை, தலைமைப் பண்புகளை கணவர் மற்றும் குழந்தைகள் அங்கீகரிப்பார்கள்.