தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்

Update:2024-10-08 00:00 IST

2024 அக்டோபர் 08-ஆம் தேதி முதல் அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் பிசினஸ், ரேஸ், லாட்டரி, ஷேர் மார்க்கெட், டிரேடிங், ஆன்லைன் டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான அளவில் முதலீடு செய்யுங்கள். வருமானம் வருகிறது என்பதற்காக கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். சுமாரான முதலீடே ஓரளவு நல்ல ரிட்டன்ஸை கொடுக்கும். உங்கள் முயற்சிகள் பரவாயில்லாமல் இருப்பதால் தைரியம், தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வேலையை பொறுத்தவரை, அரசு, தனியார் என எந்த துறையில் பணியாற்றுபவராக இருந்தாலும் உங்கள் கெரியரில் நீங்கள் கிங்காக இருக்க வாய்ப்புள்ளது. கடன் கேட்டிருந்தாலோ, லோனுக்கு விண்ணப்பித்திருந்தாலோ நிச்சயமாக கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு ரிட்டன்ஸ் கிடைக்கும். கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார்; நீங்கள் அவருக்காக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த சேல்ஸ் இருக்கிறது. அம்மா மற்றும் அப்பாவின் அன்பு, ஆதரவு முழுமையாக கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம், வருமானங்கள், முன்னேற்றங்கள் கண்டிப்பாக இருக்கிறது. ஏதாவது ஒன்றில் முதலீடு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். உங்கள் நட்பை சரியாக மெயின்டைன் செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும், மகாலட்சுமி மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்