பிரச்சினைகள் இருக்கும்
By : ராணி
Update:2023-11-21 00:00 IST
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சின் மூலம் சம்பாத்தியம் இருக்கும். தேவையற்ற முயற்சிகள், பிரயாணங்கள் வேண்டாம். உறவுகளை பலப்படுத்தாவிட்டால் தேவையில்லாத மனக்குழப்பங்கள் ஏற்படும். சொத்துகள் வாங்க வாய்ப்புகள் உண்டு. வீடு மாறுவதில் பிரச்சினைகள் இருக்கும். உயர்கல்வி சிறப்பாக இருக்கும். தந்தையால் நன்மைகள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் இருக்கும். ஆட்டோ மொபைல் மற்றும் மோட்டார் சார்ந்த துறைகள் மற்றும் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கைகூடி வரும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. மூத்த சகோதர சகோதரிகளால் நற்பலன்கள் உண்டு. சிவ தரிசனம், துர்கை, காளி வழிபாடு செய்வது நல்லது.