அப்பாவுடன் நல்ல புரிதல்
ஆன்மிக வழிகாட்டுதல்களை தேடிச்செல்வீர்கள். குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
By : ராணி
Update:2023-07-18 12:12 IST
2023, ஜூலை 17 முதல் 24 தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
ஆன்மிக ரீதியான ஈர்ப்புகள் வரும். ஆன்மிக வழிகாட்டுதல்களை தேடிச்செல்வீர்கள். குடும்பத்துடன் கோயில்களுக்கு செல்லும் வாய்ப்புகள் அமையும். நிறைய இடத்திற்கு செல்வதுடன், புதுபுது நபர்களை சந்திக்கும் சூழல் அமையும். இவை அனைத்துமே ஆன்மிகம் தொடர்பானதாகத்தான் இருக்கும். குழந்தை, மனைவி அல்லது கணவன் இடையே கொஞ்சம் பிரச்சனைகள் இருக்கும். அதேசமயம் தாய், தகப்பன் மற்றும் மாமனார், மாமியாரிடம் நல்ல இணக்கம் ஏற்படும். குறிப்பாக அப்பாவுடன் நல்ல புரிதல் உண்டாகும். வேலை மற்றும் வருமானத்தில் முன்னேற்றம் இருக்கும்.