புதிய காதலால் மகிழ்ச்சி

Update:2024-07-30 00:00 IST

2024 ஜூலை 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பொருளாதார ரீதியாக போராட்டங்கள் ஏதும் இல்லை. கையில் பணம், தனம் இருக்கிறது. உங்களின் முயற்சிகள் பிரமாதமாக இல்லை. எல்லாமே வெற்றி பெறுவதுபோல் இருக்கும். ஆனால், கடுமையாக போராட வேண்டியுள்ளது. உறவுகளால் நன்மை, பிரச்சினை இரண்டுமே இருக்கிறது. கூடியவரை மன அமைதியோடு இருக்க பாருங்கள். தொழிலை பொறுத்தவரை எந்த தொழிலாக இருந்தாலும் சுமாராக உள்ளது. வேலையில் எந்த துறையில் பணியாற்றினாலும் திருப்தியற்ற மனநிலையில் இருப்பீர்கள். இந்த வாரத்தில் டூர், டிராவல், பொழுதுபோக்கு நிகழ்வுகளால் எதிர்பாராத செலவுகள் இருக்கின்றன. குழந்தைகளுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அவர்களை பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில்கள் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எது எப்படி இருந்தாலும் உங்களின் கௌரவம், புகழ், அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு காப்பாற்றப்படும். நண்பர்கள் உங்களை விட்டு பிரிந்து போவார்கள். புதிய காதல், அந்த காதலால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஆகியவை இருக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்ட தொடர்புகள் உங்களுக்கு அமையும். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் பெருமாள் வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்