முதலீடு வேண்டாம்

Update:2024-07-16 00:00 IST

2024 ஜூலை 16-ஆம் தேதி முதல் ஜூலை 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கல்வி நன்றாக உள்ளது. மேனுஃபேக்சரிங் துறையில் இருப்பவர்களுக்கு விற்பனை நன்றாக உள்ளது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமாக இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சுமார். விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் பண்ட் போன்ற எந்த துறைகளிலும் முதலீடு செய்ய வேண்டாம். லாபம் வருவது போன்ற ஒரு தோற்றம், ஆனால், லாபம் வராது. நம்முடைய கண்முன்னே பணம், பொருள் பறிபோன மாதிரியான காலம் என்பதால், நமது பணம் முடங்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. காரணம், கிரக நிலைகள் நமக்கு சாதகமாக இல்லை. நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் உங்களுக்கு சாதகமாக இல்லை. இளைய சகோதர - சகோதரிகள், நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் உங்களுக்கு உண்மையாகவும், அன்பாகவும் இருக்க வாய்ப்பில்லை. யாரையும் நம்பி இருப்பதற்கான சூழ்நிலைகள் இல்லை. வேலையை பொறுத்தவரை, ஏதாவது ஒரு வேலை இருந்துகொண்டே இருக்கும். அதன் மூலம் வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருக்கின்றன. வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். எதிர்பாராத நட்பு கிடைக்கும். எது எப்படியிருந்தாலும் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் முழுவதுமே பிரம்மா மற்றும் தன்வந்திரி பகவானை வழிபாடு செய்யுங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்