சம்பள உயர்வு உண்டு

Update: 2024-01-01 18:30 GMT

2024 ஜனவரி 2 முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கையில் பணம், தனம், பொருள் என்பது இருக்கும். சுழற்சி முறையில் பணம் எப்போதும் கையில் இருக்கும். உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேலையில் இருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் வராது. அவர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். பார்த்துக்கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு, வேறு வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். வங்கி கடனுக்கு முயற்சித்திருந்தால் நிச்சயம் இந்த வாரத்தில் நல்ல பதில் கிடைக்கும். அரசுத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வு எழுதியவர்கள் வெற்றி பெறுவீர்கள். சொந்தமாகவோ அல்லது கூட்டாகவோ தொழில் செய்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை ஏதும் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் தேங்கி நிற்க கூடிய பணம் வந்து சேரும். முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றம் தரும்.

Tags:    

மேலும் செய்திகள்

பண வரவு