வணிக முதலீடுகள் சூப்பர்

Update:2025-04-29 00:00 IST

2025 ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் 2025 மே 05-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர். 

எந்த துறையில் பணியாற்றினாலும் வேலை, வாய்ப்புகள் நன்றாக உள்ளது. பணி உயர்வு, சம்பள உயர்வு, இன்சென்டிவ், போனஸ் போன்றவற்றை எதிர்பார்த்தால் கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் கவனமாக இருக்க வேண்டும். எவ்விதமான நேர்காணல்களில் கலந்து கொண்டாலும் தேர்வு செய்யப்படுவீர்கள். இடம், வீடு, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் ஃபண்ட், ரேஸ், லாட்டரி போன்ற எல்லாவிதமான யூக வணிகங்களும் பரவாயில்லை என்பதால் முதலீடு செய்யுங்கள். கலைத்துறையில் இருந்தால் புகழ், அந்தஸ்து, வருமானங்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பு மரியாதை கூடும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. கல்வி நன்றாக உள்ளது. அம்மாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். இந்த வாரம் முழுவதும், விநாயகர் மற்றும் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்