பொறுமை, நிதானம்

Update:2024-09-24 00:00 IST

2024 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் சர்வீஸை பொறுத்தவரை கண்டிப்பாக வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. கடன் கேட்டிருந்தால் அல்லது லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ், டிரேடிங் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசியுங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்கள் பணத்தை ஏதாவது ஒன்றில் முதலீடு செய்தால் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். இந்த வாரம் எதிர்பாராத ஆலய தரிசனம், பயணம் உள்ளிட்டவை இருக்கின்றன. இவை எல்லாமே உங்களுக்கு மகிழ்ச்சி மற்றும் சந்தோஷத்தை கொடுக்கும். எந்த அளவுக்கு முயற்சி எடுத்து செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் உங்கள் தொழிலில், துறையில் கண்டிப்பாக இருக்கும். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவி உறவு ஓரளவு சந்தோஷகரமாக இருக்கும். உயர்கல்வி நன்றாக இருக்கும். உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் முனைவோராக வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் உங்களின் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருக்கும் பட்சத்தில் இந்த வாரம் முயற்சி செய்யுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் காரியம் கைகூடி வரும். பெரியளவில் நோய் இருந்தால் அதன் தன்மை குறைய வாய்ப்புள்ளது. வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்